விக்கிமூலம் - இது ஒரு பதிப்புரிமையில்லா விக்கிநூலகத் திட்டமாகும்
இது கட்டற்ற உள்ளடக்கம் கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பு.
ஆக்கங்கள் 7,250 | மேம்படுத்த வேண்டியப் பக்கங்கள்: 3,89,291
  இன்றைய இலக்கியம்

இவ்வடிவில் பதிவிறக்குக

"நித்திலவல்லி", நா. பார்த்தசாரதி அவர்கள் எழுதிய களப்பிரர் கால வரலாற்று புதினம்.

தமிழக வரலாற்றில் பாண்டிய நாட்டைக் களப்பிரர்கள் கைப்பற்றி ஆட்சி புரிந்த காலம் இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. இருள் என்பது வெறும் ஒளியின்மை மட்டுமில்லை. புறத்தே நிலவும் ஒளியின்மையை மட்டும் இங்கு அப்பதம் குறிக்கவில்லை. கலை, மொழி, நாகரிகம், பண்பாடு எல்லாவற்றிலும் இருள் சூழ்ந்திருந்ததனையே ‘இருண்ட காலம்’ என்ற தொடர் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். களப்பிரர் காலத்தைப் பின்னணியாக வைத்துக் கொண்டு ஒரு நாவல் புனைவ திலுள்ள சிரமங்களை நண்பர்கள் சிலர் சுட்டிக் காட்டியும் அந்தக் காலப் பின்னணியில் கதை எழுத வேண்டும் என்றே நான் விரும்பினேன்.

சிறப்பான ஒரு வரலாற்று நாவல் புனைவதற்கு மகோந்நதமான பொற்காலம் மட்டும்தான் பயன்படும் என்ற நம்பிக்கை இங்கு ஒரு சம்பிரதாயமாகியிருக்கிறது. பார்க்கப் போனால் பாண்டியர்களின் இருண்ட காலம் களப்பிரர்களுக்குப் பொற்காலமாகியிருக்கும். நாட்டை மீட்டதன் பின் களப்பிரர் களின் இருண்ட காலம் பாண்டியர்களின் பொற்காலமாக மாறி யிருக்கும். ஆகவே இப்படிப் பார்ப்பதுகூடப் பார்க்கும் கோணத்திற்குத் தகுந்தாற்போல் மாறி விடுகிறது.

1. நல்லடையாளச் சொல்

திருக்கானப்பேர்க் காட்டிலிருந்து மதுரைமாநகருக்குப் போகிற வழியில், மோகூரில் மதுராபதி வித்தகரைச் சந்தித்து விட்டுப் போகவேண்டும் என்று புறப்படும்போது பாட்டனார் கூறியிருந்ததை நினைத்துக்கொண்டான் இளையநம்பி. அவன் வாதவூர் எல்லையைக் கடக்கும்போதே கதிரவன் மலைவாயில் விழுந்தாயிற்று. மருத நிலத்தின் அழகுகள் கண்கொள்ளாக் காட்சியாயிருந்தன. சாலையின் இருபுறமும் பசுமையான நெல் வயல்களும், தாமரைப் பொய்கைகளும், சோலைகளும், நந்தவனங்களும், மூங்கில்கள் சிலிர்த்தெழுந்து வளர்ந்த மேடுகளுமாக நிறைந்திருந்தன. கூடடையும் பறவைகளின் பல்வேறு விதமான ஒலிகளும், மூங்கில் மரங்கள் ஒன்றோடொன்று காற்றில் உராயும் ஓசையும், செம்மண் இட்டு மெழுகினாற் போன்ற மேற்கு வானமும் அந்த இளம் வழிப்போக்கனுக்கு உள்ளக் கிளர்ச்சி அளித்தன.

தோட்கோப்பாக வலது தோளில் தொங்கவிட்டுக் கொண்டிருந்த கட்டுச் சோற்று மூட்டையைக் கரையில் கழற்றி வைத்துவிட்டு, ஒரு தாமரைப் பொய்கையில் இறங்கி முழங்காலளவு நீரில் நின்று முகத்தையும் கைகளையும் கழுவிக்கொண்டு அமுதம் போன்ற அந்தப் பொய்கை நீரைத் தாகம் தீரக் குடித்தான் இளையநம்பி. குளிர்ந்த நீர் பட்டதும், வழி நடையால் களைத்திருந்த உடலுக்கு இதமாக இருந்தது. சூடேறியிருந்த கண்களில் சில்லென்று தண்ணீர் நனைந்ததும் பரம சுகமாயிருந்தது.

(மேலும் படிக்க...)
 
பரண்
தொகு
  கூட்டு முயற்சி

இந்த மாதத்தின் மெய்ப்புப் பார்ப்பு புத்தகம்
பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்  (1992)
ஆசிரியர் நா. பார்த்தசாரதி.

சென்ற மாதம் நிறைவடைந்தது: தமிழ் வளர்த்த நகரங்கள்
அடுத்த கூட்டு முயற்சி சூலை மாதம் தொடங்கவிருக்கிறது.

தொகு
  புதிய உரைகள்
மேலும்
தொகு
  இலக்கியங்கள்
சங்க இலக்கியம் பழந்தமிழ் இலக்கியங்கள்

இலக்கணம்

அகரமுதலியியல்

காப்பியங்கள்

திரட்டு நூல்கள்

தற்கால எழுத்தாளர் படைப்புகள்

 
  • பாரதிதாசன்
  • கவிமணி
  • புதுமைப்பித்தன்
  • ஜெயகாந்தன்
தொகு
  முக்கிய பகுப்புகள்

எழுத்தாளர்கள்

படைப்புகள்

  • அகரமுதலான வரிசையில்
  • ஆண்டு வாரியாக
  • சிறுவர் கதைகள்
  • வகைமை வாரியாக
  • பொருள் வாரியாக
  • நாட்டுடைமை நூல்கள்
தொகு
  மின்வருடிய நாட்டுடைமை நூல்களின் மெய்ப்பு விவரங்கள்
விக்கிமூலத்தில் மின்வருடப்பட்ட நூல் பக்கங்களின் நிலைகள் பின்வருமாறு. மெய்ப்பு பார்ப்பதில் தாங்களும் பங்கு பெறலாம்.

பக்க விவரங்கள்

3,89,291 பக்கங்கள் மெய்ப்பு பார்க்கப்படாமல் உள்ளவை
7,466 பக்கங்கள் சரிபார்க்கப்பட்டவை
6,368 பக்கங்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டவை
76 பக்கங்கள் வெற்றுப் பக்கங்கள்
23 பக்கங்கள் மெய்ப்பு பார்க்க சிக்கலானவை

நூல் விவரங்கள்

மெய்ப்பு பார்க்கப்படாத மின்னூல்கள்: 2,110
மெய்ப்பு முடிந்தது. சரிபார்க்க வேண்டிய மின்னூல்கள்: 25
மெய்ப்பும் சரிபார்ப்பும் முடிந்த மின்னூல்கள்: 31

நூல்களின் நிலை

எல்லா பக்கங்களும் இருக்கும் மின்னூல்கள்: 914 (இம்மின்னூல்களை மெய்ப்பு செய்யலாம்)
சில பக்கங்கள் மட்டும் தேவைப்படும் மின்னூல்கள்: 330 (இம்மின்னூல்களை தற்போதைக்கு மெய்ப்பு செய்ய வேண்டாம்)

தொகு
வணிக நோக்கமற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் விக்கிமூலம் வழங்கப்படுகிறது. பிற பன்மொழி, கட்டற்ற திட்டங்கள்
விக்கிப்பீடியா
கலைக்களஞ்சியம்
விக்கி செய்திகள்
செய்திச் சேவை
விக்சனரி
அகரமுதலி
விக்கி நூல்கள்
நூல்கள் மற்றும் கையேடுகள்
விக்கிமேற்கோள்
மேற்கோள்களின் தொகுப்பு
விக்கியினங்கள்
உயிரினங்களின் கோவை
விக்கிபொது
பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு
மேல்-விக்கி
விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு
This article is issued from Wikisource. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.