ஜோர்ஜ் பெர்னாட் ஷா

மிருகங்கள் எனது நண்பர்கள், நான் எனது நண்பர்களை உண்பதில்லை.

ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856 ஆம் ஆண்டு ஜூலை 26 - 1950 ஆம் ஆண்டு நவம்பர் 2 ) ஒரு அயர்லாந்து நாடக ஆசிரியராவார். இசை மற்றும் இலக்கிய விமர்சனமே அவரது முதல் இலாபத் தன்மை கொண்ட எழுத்துப் படைப்புகள் ஆகும். அதில் தனது திறனைக் கொண்டு மிக நேர்த்தியான பத்திரிக்கைப் படைப்புகள் பலவற்றை எழுதினார். அவரது பிரதான திறமை நாடகமே ஆகும். மேலும் அவர் 60க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட அவரது அனைத்து எழுத்துப் படைப்புகளும் சமூகத்தில் பெருவாரியாக நிலவிவரும் சிக்கல்களைப் பற்றியதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மிக முக்கிய கருப்பொருள்களை மிகவும் மனதால் ஏற்றுக்கொள்ளும்படி மாற்றுவதற்கு அவற்றில் ஒரு நகைச்சுவை அம்சமும் இழையோடியபடி இருக்கும். கல்வி, திருமணம், மதம், அரசாங்கம், உடல்நலம் மற்றும் சாதிப்பாகுபாடு ஆகிய அனைத்தையும் பெர்னாட் ஷா ஆராய்ந்தார்.

மேற்கோள்கள்

 • வாழ்க்கை என்பது உங்களைக் கண்டுபிடிப்பதல்ல, வாழ்க்கை என்பது உங்களை உருவாக்குவதே![1][2]
 • மிருகங்கள் எனது நண்பர்கள், நான் எனது நண்பர்களை உண்பதில்லை.[3][4]
 • ஒரு செயலைச் செய்ய முடியாது என்பவர்கள் அச்செயலைச் செய்பவர்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது.[5][6]
 • பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள். - ஜோர்ஜ் பெர்னாட் ஷா.[7]

சான்றுகள்

 1. George Bernard Shaw (in ஆங்கிலம்). Retrieved on 11, 2014. Retrieved on 4, 2014.
 2. George Bernard Shaw (in ஆங்கிலம்). Retrieved on 11, 2014. Retrieved on 4, 2014.
 3. George Bernard Shaw (in ஆங்கிலம்). Retrieved on 11, 2014. Retrieved on 4, 2014.
 4. George Bernard Shaw (in ஆங்கிலம்). Retrieved on 11, 2014. Retrieved on 4, 2014.
 5. George Bernard Shaw (in ஆங்கிலம்). Retrieved on 11, 2014. Retrieved on 4, 2014.
 6. George Bernard Shaw (in ஆங்கிலம்). Retrieved on 11, 2014. Retrieved on 4, 2014.
 7. http://tamilcube.com/res/tamil-quotes.aspx

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikiquote. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.