மணிரத்னம் (பிறப்பு - ஜூன் 2, 1956) இந்திய அளவில் அறியப்படும் தமிழ் இயக்குனர்களுள் ஒருவர். காதல், தீவிரவாதம் ஆகியவற்றை நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்டு சொல்வது இவருடைய பாணி.

மேற்கோள்கள்

நபர் குறித்த மேற்கோள்கள்

  • 1950களிலிருந்து 80 வரையிலும் பேசும் படமாய், அத்தனை உணர்ச்சிகளையும், பக்கம் பக்கமாய் பேசியே, விளக்கி வந்த தமிழ் சினிமாவில், 'இந்த மீடியம், பார்த்து ரசிப்பதற்கான மீடியம். பாவங்களில், காட்சிகளில் விளக்கமுடியாத இடத்தில் மட்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தினால் போதும்' என்ற 'தியரி'யைத் தன் படங்களின் மூலம் ரசிகனுக்கு விளங்க வைத்தவர்களில், மணிரத்னம் குறிப்பிட்டுப் பாராட்ட வேண்டியவர். மணிரத்னத்தைப் பற்றி சிவகுமார் கூறியது. [1]


சான்றுகள்

  1. சிவகுமார் (2010). இது ராஜபாட்டை அல்ல. அல்லயன்ஸ். pp. 511-513.
This article is issued from Wikiquote. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.