நம்மாழ்வார் இயற்கை முறை வேளாண்மை விஞ்ஞானி ஆவார்.

மேற்கோள்கள்

  1. பூச்சிகள் எல்லாம் நம் நண்பர்கள்.
  2. உரம் என்னும் பெயரில் பூச்சிக்கொல்லிகளை விற்றார்கள்.
  3. பூச்சிவிரட்டிகள் என்னும் பெயரில் பூச்சிக்கொல்லிகளை விற்றார்கள்.
  4. இலட்சம் இளைஞர்கள் இயற்கை வேளாண்மையில் இறங்கினால் தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றிடலாம்.
  5. நூறுநாள் வேலைத்திட்டத்தின் வருவாயை எந்த நூறு நாட்கள் வேளான்தொழிலாளாருக்குத் தருவதென்பதை என்பதை கிராமசபைகளே தீர்மானிக்க வேண்டும். அந்த நூறுநாட்களை தூர்வாரவும் ஏரி குலங்களை தூய்மையாக்குவதிலும் பயன்படுத்த வேண்டும்.
  6. காலம்காலமாக மாடு மேய்ப்பவர்களையும் நடவு நடுபவர்களையும் திறனற்றவர்கள் என்கிறார்கள். தேர்ச்சியற்றவர் என்கிறார்கள். அப்ப்டிச்சொல்லும் அமைச்சர்கள் யாராவது மூன்றுமணிநேரமாவது இடுப்பை வளைத்து நாத்து நட முடியுமா என பார்த்து விடலாமா? எந்த பாராளுமன்ற உறுப்பினராவது மண்வெட்டி பிடித்து அந்த வரப்பை வெட்டிடுவானா? கலப்பையைப் பிடித்து மாட்டுக்காலில் இருந்து நழுவாமல் ஒரு வளையம் வந்துவிட முடியுமா இவர்களால்?
  7. இப்போது இருக்கும் அரசு நமதரசல்ல. அமைச்சர்கள் நம் அமைச்சர்கள் அல்ல. நம் சட்டமன்ற உறுப்பினர், நம் பாராளுமன்ற உறுப்பினர், நம் ஆட்சியெல்லாம் இனிமேல் தான் வரும். வரும்போது இந்நிலம் விவசாயிகள் கையில் இருக்கும்.
  8. வேளாண்மை என்பது சூழலுக்கு ஏற்ப செய்வது. உலகம் முழுக்க ஒரே பயிர்கள், உரங்கள் பயன்படுத்த முடியாது. (Agriculture is Location Specific).
  9. விவசாயத்தில் வருவாய் இல்லை என்றால் நிலத்தை விட்டு போய் விடு எனச் சொல்ல ஒரு பிரதம மந்திரி தேவையா? இருப்பதிலேயே மிகப்பெரிய நகைச்சுவை இதாத்தான் இருக்கனும்.
This article is issued from Wikiquote. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.