நம்பிக்கை (belief) என்பது ஒரு உளவியல் சார்ந்த விடயமாகும். ஒருவர் அல்லது ஓரமைப்பு, ஒன்றின் மீது அல்லது ஒருவரின் மீது வைக்கும் மிகுந்தப் பற்று அல்லது கூடிய விருப்பு போன்றவற்றின் அடிப்படையில் அதனை உண்மை என நம்பும் நிலையிலேயே நம்பிக்கை மனித மனங்களில் ஏற்படுகின்றது. அது சரியானதாகவோ தவறானதாகவோ இருக்கலாம். உண்மையானதாகவோ உண்மையற்றதாகவோ கூட இருக்கலாம்.

மேற்கோள்கள்

 • மனித ஆளுமை அளவிட முடியாத திறன் வாய்ந்தது என்பதில் நான் திடமான நம்பிக்கை கொண்டுள்ளேன்; ஒவ்வொருவரும் ஒரு ஆக்கராக முடியும் - அவர்களின் தடயத்தை இவ்வுலகில் விட்டுச் செல்ல முடியும் ...
 • காற்றில் அலைக்கழிக்கப்படும் தூசு போல ஒன்றுக்கும் உதவாதவன் என்று எவருமே இருக்கக் கூடாது; ஒவ்வொருவரும் ஒளிர வேண்டும் - கோடானுகோடி விண்மீன் திரள்கள், ஒவ்வொன்றும் ஒளிருவதைப் போல... --- வாசிலி சுகோம்லின்ஸ்கி [1]
 • நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை. - அப்துல் கலாம்
 • நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு. - மார்டின் லூதர் கிங்
 • நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை - டிக்கன்ஸன் [2]
 • ரோஜா மலரும்போதே அழகு மிகுந்திருக்கும்; அச்சம் அகலும்போது அரும்பும் நம்பிக்கையே அதிக உள்சானம் அளிப்பதாகும்.- ஸ்காட்[3]
 • மனிதனை அழிக்கக்கூடிய ஒரே விஷயம் அழிவில் நம்பிக்கை வைப்பதே. - மார்ட்டின் பூபெர்[3]
 • நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கை தவிர நலிவோர்க்கு வேறு மருந்து கிடையாது. -ஷேக்ஸ்பியர்[3]
 • காருக்குப்பின் வேனில், இரவுக்குப் பின் பகல்; புயலுக்குப் பின் அமைதி. -அக்கம்பிஸ்[3]
 • நம்பிக்கையே மனிதனுக்கு நேரும் சகல நோய்களுக்கும் ஒரே மலிவான சஞ்சீவி. - கெளலி[3]
 • இரவில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அநேக சமயங்களில் காலையில் எல்லாம் சரிப்பட்டுப்போகும். -ஆவ்பரி[3]
 • நம்பிக்கையே துக்கத்தால் ஏற்பட்ட கறையைப் போக்கும். -மூர்[3]
 • எல்லாமொழிகளிலும் அதிக துக்ககரமானவை- அப்படிச் செய்திருந்தால்'- என்னும் மொழிகளே. -விட்டியர்[3]
 • ஆகாயத்தில் கட்டும் அரண்மனைகளை அழியாது வைத்திருக்க அதிகமான பொருள் தேவை -புல்வெர் லிட்டன்[3]
 • நம்பிக்கை என்பது விழித்திருக்கும் நிலைமையில் காணும் கனவு. -பிளினி[3]
 • நம்பிக்கை என்பது ஒருநாளும் இதயத்திலிருந்து அழிந்து போவதில்லை. மனிதன் என்றும் ஆசீர்வதிக்கப்பட வேண்டியவனே யன்றி ஆசீர்வாதம் தருபவனல்லன். -போப்[3]
 • நம்பிக்கை நடத்தும் விருந்துக்குச் செல்ல விரும்பாதவர் கிடையார். -காஸ்காயின்[3]
 • நம்பிக்கை எதிர் காலத்துக்கு ஒளி தரும்; ஞாபகம் இறந்தகாலத்துக்கு முலாம் பூசும். -மூர்[3]
 • நம்பிக்கை என்பது அதிர்ஷ்ட தேவதை நடத்தும் ஏமாற்று லாட்டரியாகும். அதில் நூற்றுக்கு ஒருவர்க்கே பரிசு உண்டு. - கெளலி[3]
 • உயிருள்ளவரை நம்பிக்கையும் இருந்துகொண்டிருக்கும். -கே[3]
 • சாத்தியம் என்று நம்புவோர்க்கே எதுவும் சாத்தியமாகும். -வெரிஜில்[3]

சான்றுகள்

This article is issued from Wikiquote. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.