சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை என்னும் இந்த நூல் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று.

ஆசிரியர்: கபிலதேவ நாயனார்.

பாடல்கள்

அந்தி மதிமுகிழான் அந்தியஞ் செந்நிறத்தான்
அந்தியே போலும் அவிர்சடையான் – அந்தியில்
தூங்கிருள் யாமமே போலும் சுடுநீற்றான்
வீங்கிருள்சேர் நீலம் மிடறு.[1]

என்பது இந்நூலின் முதல் வெண்பாப்பாடல்.

தாமரைக் கோவுநன் மாலும் வணங்கத் தலைப்பிடத்துத்
தாமரைக் கோவணத் தோடிரந் துண்ணினும் சார்ந்தவர்க்குத்
தாமரைக் கோமளத் தோடுல காளத் தருவர்கண்டீர்
தாமரைக் கோமளக் கைத்தவ ளப்பொடி சங்கரரே.

என்பது இந்நூலில் ஆறாம் பாடலாக அமைந்துள்ள கட்டளைக்கலித்துறைப் பாடல். இந்தப் பாடலில் மடக்கு என்னும் அணிநலம் காணப்படுகிறது. அந்த மடக்குகளில் பிரித்துப் பொருள் காணவேண்டிய பொதுமொழித் தொடர்கள் உள்ளன.[2]

சான்றுகள்

  1. இருள் போல் நீலநிறம் கொண்ட மிடறு
  2. தாமரைக்கோ பிரமனும், திருமாலும் வணங்குகையில், தாம் மட்டும் அரைக் கோமணத்தோடு இரந்து உண்டாலும், தன்னைச் சார்ந்தவர்களுக்கு தாமரைக் கோமகளாகிய திருமகளோடு உலகாளும் பேற்றினைத் தருவான். அவனது தாமரைக் கோமளக் கையில் தவள்வது பொடியாகிய சாம்பல். அவன் சங்கரன்.
This article is issued from Wikiquote. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.