தமிழில் கலை என்பதற்கு கற்றற்கு உரியவை எல்லாம் கலை என்ற பொது வரையறையாற் தரப்படுகிறது. இந்த வரையறைக்கிணங்கவே தமிழ் w:விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் பெயரும் அமைந்திருக்கின்றது. கலைச்சொல் என்ற சொல்லாடலிலும் இப்பொருளே வழங்குவதைக் காணலாம். எனினும் உணர்ச்சியும் கற்பனையும் கொண்டு வளர்ந்த ஓவியம் முதலியவற்றை மட்டுமே கலை என்று சிறப்பித்து வழங்குதல் பொருந்தும் என்னும் தமிழ் அறிஞர் மு. வரதராசனாரின் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது. பொது வழக்கிலும் மு. வரதராசனாரின் கூற்றுக்கமையவே கலை என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போது அந்த வழக்கம் பழைய கற்றலுக்கு உரியவை எல்லாம் கலை என்ற பொருளிலும் எடுத்தாளப்படுகின்றது.

மேற்கோள்கள்

  • ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு ஈடானது -- நெப்போலியன் போனபார்ட்
  • நம் உள்ளொளியின் மீது படியும் அன்றாட வாழ்வின் புழுதியைக் கழுவிடும் கலையே ஓவியம் -- பிக்காசோ
  • மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா ? -- எம்.ஆர். இராதா
  • புறப்பொருள் மூலம், ஆன்மிக அழகை புலப்படுத்துவதே கலை. - சால்வடோர் அயேந்தே
  • கலை ஒரு ஆன்மா, மற்றொரு ஆன்மாவுடன் உரையாடும் சங்கேத மொழியாகும். - ரஸ்கின் பாண்ட்
  • கலை, அதன் சக்திக்குத் தகுந்தபடி இயற்கையைப் பின்பற்றிச் செல்கிறது. - தாந்தே

ஈ. வெ. இராமசாமி

  • இனிமேல் தான் நமக்கான இலக்கியம் தோன்ற வேண்டும். அறிவை, ஒழுக்கத்தை வளர்க்கும் இலக்கியம் தேவை. அதில், இந்து மதம், ஆரியம், ஆத்திகம் மூன்றும் இருக்கக் கூடாது. அறிவு, ஒழுக்கம், விஞ்ஞானம் இவைதான் இருக்க வேண்டும்.[1]
  • எப்படிப்பட்ட கலையும், ஒழுக்கக்குறைவுக்கும் மூட நம்பிக்கைக்கும் சிறிதும் பயன்படக்கூடாததாய் இருக்க வேண்டும்.[2]
  • ஆரிய ஆதிக்கமும், கலப்பும் அற்ற இலக்கியம் தமிழனுக்கென்று ஒன்றும் இல்லை.[2]

சான்றுகள்

  1. ஈ.வெ.ரா சிந்தனைகள் புத்தகம் இரண்டு, முதல் பதிப்பு, பக்கம் 1258
  2. 1 2
This article is issued from Wikiquote. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.