விக்கிலீக்ஸ்

விக்கிலீக்ஸ் (Wikileaks) அல்லது விக்கிகசிவுகள் எனப் பொருள்படும் இணையதளம்[1]. இது சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் ஒரு இலாப நோக்கமற்ற ஊடகமாகக் கருதப்படுகின்றது. இந்த இணையத்தளம் பெயர் அறிவிக்காதவர்களின் பங்களிப்புகளிப்பைக் கொண்டிருப்பதுடன், அரசு அல்லது சமய நிறுவனங்களின் பாதுகாக்கப்பட்ட இரகசிய ஆவணங்களை பொது மக்களின் பார்வைக்கு வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றது. 2006 ஆம் ஆண்டில் இந்த இணையத்தளம் நிறுவப்பட்டது[2]. சுவீடனிலிருந்து இயங்கும் இந்த இணையதளத்தில் பங்களிப்பாளர்களின் விவரங்கள் அறிய இயலாதவாறும் தேடவியலாதவாறும் தனி செயல்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிறுவிய ஓராண்டுகளுக்குள்ளேயே 1.2 மில்லியன் ஆவணங்கள் தரவேற்றப்பட்டுள்ளது.[3] ஆப்கானில் அமெரிக்க படையினரின் ஆவணங்களை வெளியிட்டு பரவலாக அறியப்பட்டது.[4] தனது அறிக்கைகளுக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளது.

விக்கிலீக்ஸ்
உரலி விக்கிலீக்ஸ்
தளத்தின் வகை பறை சாற்றுதல்;வெளிக்காட்டுபவர்
பதிவு செய்தல் தனிநிறுவனம்
உரிமையாளர் யூலியன் அசாஞ்
வெளியீடு திசம்பர் 2006

வரலாறு

Wikileaks.org இணைய தள பெயர் 4 அக்டோபர் 2006 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.[5] இந்த இணையதளம் தனது முதல் ஆவணத்தை, டிசம்பர் 2006 ஆம் ஆண்டு வெளியிட்டது.[6]

மேற்கோள்கள்

  1. Haddow, Douglas (7 April 2010). "Grim truths of Wikileaks Iraq video". The Guardian (London). http://www.guardian.co.uk/commentisfree/libertycentral/2010/apr/07/wikileaks-collateral-murder-iraq-video. பார்த்த நாள்: 7 April 2010. "... a Sweden based non-profit website"
  2. "Wikileaks:About". WikiLeaks. மூல முகவரியிலிருந்து 14 March 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 June 2009.
  3. "Wikileaks has 1.2 million documents?". Wikileaks. பார்த்த நாள் 28 February 2008.
  4. "Whois Search Results: wikileaks.org". GoDaddy.com. பார்த்த நாள் 10 December 2010.
  5. Calabresi, Massimo (2 December 2010). "WikiLeaks' War on Secrecy: Truth's Consequences". Time (New York). http://www.time.com/time/world/article/0,8599,2034276-3,00.html. பார்த்த நாள்: 19 December 2010. "Reportedly spurred by the leak of the Pentagon papers, Assange unveiled WikiLeaks in December 2006."

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.