சனி, ஜனவரி 14, 2017

இசுபேசு-எக்சு என்னும் நிறுவனம் தன்னுடைய ்பால்கன்-9 ஏவுகலன் மூலம் 10 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி விட்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பி வந்தது. ்பால்கன்-9 ஏவுகலன் கலிபோர்னியாவிலுள்ள வான்டன்பெர்க் வானூர்தி படை தளத்திலிருந்து உள்ளூர் நேரம் காலை 9.54இக்கு ஏவப்பட்டது.


2016 செப்டம்பர் மாதம் இவ்வேவுவூர்தி இலியம் அழுத்த கலன்கள் வடிவமைப்பில் இருந்த கோளாறு காரணமாக வெடித்த பின் செல்லும் முதல் ஏவுதல் இதுவாகும். இவ்வேவூர்தியின் முதல் பாகம் பசிபிக் பெருங்கடலில் உள்ள தளத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது.


வர்சீனியாவின் இரிடியம் செயற்கைகோள் குரல் மற்றும் டேட்டா நிறுவனத்திற்காக 10 செயற்கை கோள்களும் விண்ணில் ஏவப்பட்டன. ஐரோப்பிய (பிரான்சு) தாலசு அலெனியா நிறுவனம் தன் பழைய செயற்கை கோள்களை மாற்றுவதற்காக 81 செயற்கை கோள்களை ்பால்கன்-9 மூலம் ஏவ முடிவு செய்துள்ளது.


கப்பல்கள் வானூர்திகள் கட்டுப்பாட்டு அறையுடன் உள்ள தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டால் அக்கப்பல்களையும் வானூர்திகளையும் கண்டுபிடிக்க இரிடியம் நிறுவனம் உதவும்.


சனவரி 9 அன்று ஏவ திட்டமிடப்பட்டிருந்த இவ்வேவூர்தி காலநிலை சரியில்லாததால் இன்று சனவரி 14 அன்று ஏவப்பட்டது.


மூலம்

This article is issued from Wikinews. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.